அரசியலில் செய்திகள்

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை அளித்துள்ள நன்கொடையாளர்களின் விவரங்கள் – 15.5.2020

மாண்புமிகு அம்மாவின் அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்த நிவாரணப் பணிகளுக்கென முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், அரசு சார் நிறுவன ஊழியர்கள், அரசு சார் வாரியங்கள், மற்றும் பொது மக்களிடமிருந்து 5.5.2020 அன்று வரை மொத்தம் 347 கோடியே 76 லட்சத்து 15 ஆயிரத்து 440 ரூபாய் வரப்பெற்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, 6.5.2020 முதல் 14.5.2020 வரை உள்ள ஒன்பது நாட்களில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மனமுவந்து நிதியுதவி வழங்கியவர்களின் விவரங்கள்:

 • சக்தி மசாலா பிரைவேட் லிமிடெட் 5 கோடி ரூபாய்
 • சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் 2 கோடி ரூபாய்
 • மோபிஷ் இந்தியா பவுண்டேஷன் 1 கோடியே 50 லட்சம் ரூபாய்
 • சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட், மணலி 1 கோடி ரூபாய்
 • பைஜுஸ் (Think and Learn Pvt Ltd), 1 கோடி ரூபாய்
 • ரானே TRW ஸ்டீரிங் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் 45 லட்சம் ரூபாய்
 • ரானே ஹோல்டிங்ஸ் 25 லட்சம் ரூபாய்
 • ரானே NSK ஸ்டீரிங் சிஷ்டம் பிரைவேட் லிமிடெட் 20 லட்சம் ரூபாய்
 • ரானே (மெட்ராஸ்) லிமிடெட் 5 லட்சம் ரூபாய்
 • ரானே பிரேக் லைனிங் லிமிடெட் 5 லட்சம் ரூபாய்
 • மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் 31 லட்சத்து 15 ஆயிரத்து 804 ரூபாய்
 • தமிழ்நாடு பான் புரோக்கர்ஸ் அண்டு ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் 31 லட்சம் ரூபாய்
 • மதுரா கோட்ஸ் பிரைவேட் லிமிடெட் 25 லட்சம் ரூபாய்
 • ஆனந்தம் பவுண்டேஷன் 25 லட்சம் ரூபாய்
 • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களின் ஒரு நாள் ஊதியம் 50 லட்சத்து 67 ஆயிரத்து 908 ரூபாய்
 • இந்தியன் ஆயில் நிறுவனம் 1 கோடி ரூபாய்
 • மாநில திட்ட இயக்குநரகம் 93 லட்சத்து 28 ஆயிரத்து 340 ரூபாய்
 • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் 76 லட்சத்து 49 ஆயிரத்து 666 ரூபாய்
 • மாவட்ட ஆட்சியரகம், கோயம்புத்தூர் 10 லட்சம் ரூபாய்
 • MEPCO Schienk மெட்ரிகுலேஷன் பள்ளி 15 லட்சத்து 7 ஆயிரத்து 430 ரூபாய்
 • P.R சுந்தர் மேன்சன் கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட் 25 லட்சம் ரூபாய்
 • அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை 27 லட்சத்து 15 ஆயிரத்து 500 ரூபாய்
 • கோயம்புத்தூர் மாநகராட்சி 13 லட்சத்து 66 ஆயிரத்து 664 ரூபாய்
 • அல்ட்ரா மெரைன் அண்டு பிக்மெண்ட்ஸ் லிமிடெட் 10 லட்சம் ரூபாய்
 • ஸ்ரீ சரவணா மில்ஸ் பிரைவேட் லிமிடெட் 10 லட்சம் ரூபாய்

மேற்கண்ட ஒன்பது நாட்களில் மட்டும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து 19 கோடியே 29 லட்சத்து 22 ஆயிரத்து 903 ரூபாய் வரப்பெற்றுள்ளது. 14.5.2020 வரை பெறப்பட்ட மொத்த தொகை 367 கோடியே 5 லட்சத்து 38 ஆயிரத்து 343 ரூபாய் ஆகும்.

மேற்கண்ட நாட்களில் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் நிவாரண நிதி அளித்த நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும், பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், தொடர்ந்து அரசுக்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், பத்து லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருந்தாலும், சிறுகச் சிறுக சேமித்த தங்கள் பணத்தை மனமுவந்து அளித்த பொது மக்களுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

மேலும், கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு ஆதரவாக, தங்களது ஒரு நாள் ஊதியத்தை மனமுவந்து அளித்த அரசு ஊழியர்களுக்கும், பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்.

 

Related posts

உயிரிழந்த திரு. ஜெயராஜ் மற்றும் திரு. பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாயினை முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கவும், மேலும், அக்குடும்பத்தில் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தகுதிக்கேற்ப ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

The Duthal

நாமக்கல் நகராட்சி பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் ஒரு நபருக்கு மேல் செல்லக் கூடாது – ஆட்சித்தலைவர் திரு.கா.மெகராஜ். இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார்.

Admin Main

புதையல் மற்றும் ஆண் வாரிசுக்காக 13 வயது மகளை தந்தையே நரபலி கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Admin Main

ஒரு கருத்தை விடுங்கள்