மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் இன்று (15.5.2020) தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் சென்னை பன்னாட்டு மைய தொழில் முனைவோர் உடனான இணைய வழி கருத்தரங்கு (webinar) நிகழ்ச்சியை துவக்கி வைத்து உரையாற்றினார்கள். உடன் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி. சம்பத், மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர் திரு.பா. பென்ஜமின், தலைமைச் செயலாளர் திரு. க. சண்முகம், இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எஸ். கிருஷ்ணன், இ.ஆ.ப., தொழில் துறை முதன்மைச் செயலாளர் திரு நா. முருகானந்தம், இ.ஆ.ப., குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராஜேந்திர குமார், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.