செய்திகள்

ஊரடங்கு மேலும் கடுமையாக்கப்படும் என்பது தவறான தகவல் – மேட்டூர் அணை நீர் திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.

 • ஊரடங்கு மேலும் கடுமையாக்கப்படும் என்பது தவறான தகவல் – மேட்டூர் அணை நீர் திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.
 • தேவையில்லாமல் வெளியே சுற்றாதீர்கள் – முதலமைச்சர் அறிவுரை.
 • வல்லரசு நாடுகளே கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றன – முதலமைச்சர்.
 • அரசின் ஊரடங்கு விதிகளை மக்கள் கடைபிடிக்காதது வருத்தமளிக்கிறது.
 • நோயின் தீவிரத்தை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. அரசுக்கு தயவுசெய்து ஒத்துழைப்பு வழங்குங்கள்- முதலமைச்சர் வேண்டுகோள்.
 • அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள்.

 

 • கொரோனா பரவல் குறித்து எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு தவறாக விமர்சிக்கிறார்கள்.
 • பள்ளிகளில் அதிக கட்டணம் குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை.
 • கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் மத்திய அரசு நிர்ணயித்ததை விட தமிழகத்தில் குறைவு.
 • கொரோனா கட்டுக்குள் வந்த பிறகு பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படும்.
 • மேட்டூர் அணையில் குறுவை சாகுபடிக்கு 90 நாட்கள் நீர் திறந்து விடப்படும்.
 • 5 லட்சத்து 22 ஆயிரத்து 400 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன; உபரிநீரைக் கொண்டு 100 ஏரிகளை நிரப்ப நடவடிக்கை.
 • முக்கொம்பில் புதிய கதவணை அமைக்கும் பணிகள் தீவிரம். முதல்வர் பழனிசாமி.
 • கடைமடை வரை மேட்டூர் அணையின் நீர் சென்று சேர அரசு நடவடிக்கை.
 • டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகள் 80% நிறைவடைந்துள்ளன.
  குடிமராமத்துப் பணிகளுக்காக கடந்த 4 ஆண்டுகளில் 1,433 கோடி ரூபாய் ஒதுக்கீடு. முதல்வர் பழனிசாமி.

 

 

 • 8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம்; இதற்கு தமிழக அரசு உதவி தான் செய்கிறது.
 • ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நிலங்கள் எடுக்கப்பட்டு தான் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.-முதல்வர் பழனிசாமி.

 

Related posts

சென்னை உட்பட 3 மாநகராட்சியில் நாளை மட்டும் மாலை 5 மணி வரை கடைகள் திறக்க அனுமதி; முழு ஊரடங்கு முடியவுள்ள நிலையில் தமிழக அரசு அறிவிப்பு

Admin Main

சலூன் கடைகள் செயல்பட அனுமதி – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

Admin Main

நிலக்கரி, கச்சா எண்ணெய் உள்ளிட்ட முக்கிய 8 துறைகளின் உற்பத்தி கடந்த மார்ச் மாதம் 6.5% சரிந்துள்ளது

Admin Main

ஒரு கருத்தை விடுங்கள்