செய்திகள்

 திண்டுக்கல் மாவட்டம் வெளிநாடு/ வெளி மாநிலம்/ சென்னை நகரிலிருந்து திரும்புவோர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்

வெளி மாநிலங்களிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் திரும்புவோர்கள் மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் சுகாதாரத்துறையினரால் மருத்துவ பரிசோதனை செய்யப்படுவர்.


மேலும், வெளிநாடுகள், டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்கள் மற்றும் சென்னை நகரிலிருந்து வரும் அனைத்து நபர்களுக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை (Swab Test) எடுக்கப்படும். சோதனை முடிவுகள் வரும் வரை அவர்கள் அரசால் தெரிவு செய்யப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்படுவர்.

வெளிநாடுகளில் இருந்து வரம் நபர்களில் சோதனை முடிவில் தொற்று உறுதியில்லை என வந்த பின்பு ஊர் திரும்பிய நாளிலிருந்து 7 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்படுவர்.வெளி மாநிலங்களிலிருந்து வரும் நபர்கள் எனில் சோதனை முடிவுகள் வரப்பெறும் வரை முகாம்களில் தனிமைப்படுத்தி வைக்கப்படுவர். இவ்வாறு தங்க வைக்கப்படும் முகாம்களில் தங்க விருப்பம் இல்லாதோர் தங்களது சொந்த செலவில் அட்டவணைப்படுத்தப்பட்ட மூன்று வகையான விடுதிகளில் (உணவு மற்றம் தங்கும் வசதியுடன் கூடிய) தங்கிக் கொள்ளலாம்.

 

Related posts

சென்னையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்.

Admin Main

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில்  (30.5.2020) தலைமைச் செயலகத்தில், மாநில அளவிலான வங்கியாளர் குழுக் கூட்டம் நடைபெற்றது.

Admin Main

வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் 1.5 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நாசம்

Admin Main

ஒரு கருத்தை விடுங்கள்