மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் இன்று (25.6.2020) கோயம்புத்தூர் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில், முகக்கவசங்கள் விற்பனை செய்யும் கடையினை பார்வையிட்டார்கள். உடன், மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் திரு.எஸ்.பி. வேலுமணி, மாண்புமிகு சட்டப்பேரவை துணைத் தலைவர் திரு.பொள்ளாச்சி வி. ஜெயராமன், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கு. இராசாமணி, இ.ஆ.ப., ஆகியோர் உள்ளனர்.