செய்திகள் வர்த்தகம்

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாஸ்க் புரோட்டா -மதுரை புரோட்டா கடைகாரர் அசத்தல்

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாஸ்க் புரோட்டா -மதுரை புரோட்டா கடைகாரர் அசத்தல்நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிப்பதால் தமிழகம் முழுவதும் மாஸ்க் அணிவதும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இது குறித்து விழிப்புணர்வுகளை அரசு தரப்பிலும் போலீஸ் தரப்பிலும் வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், மதுரையில் புரோட்டா பிரியர்கள் அதிகம் என்பதால் அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாஸ்க் புரோட்டா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது விற்பனையிலும் அசத்தி வருவதோடு பெரும் விழிப்புணர்வினையும் ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறான புரோட்டாவின் மூலம் வித்தியாசமான விழிப்புணர்வு வழங்கி வரும் மதுரை புரோட்டா கடை உரிமையாளருக்கு காவல்துறையின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

Related posts

அரியலூர் மாவட்டம் 7வயது சிறுவனை அவனது பாட்டியிடம் பத்திரமாக ஒப்படைத்த காவலர்.

The Duthal

காவலரின் மனிதநேய செயல் – திருவாரூர் நகர காவல் நிலைய காவலர் திரு. அன்பரசன்

Admin Main

திருச்சியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார்

Admin Main

ஒரு கருத்தை விடுங்கள்