வங்கிகளின் பங்கு விலை உயர்ந்ததை அடுத்து இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகிறது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 438 புள்ளிகள் உயர்ந்து 37,857 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 121 புள்ளிகள் உயர்ந்து 11,144-ஆக உள்ளது. மாருதி சுசூகி,எச்.டி.எஃப்,சி., ஐ.சி.ஐ.சி.ஐ, ஆக்சிஸ், கோட்டக் மகிந்திரா மற்றும் எஸ்.பி.ஐ பங்குகள் விலை உயர்ந்துள்ளது.