சுற்றுலா செய்திகள்

கர்நாடகாவில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாநில எல்லையில் இருமாநில தொழிலாளர்களும் அச்சமின்றி பயணித்தனர்.

கர்நாடகாவில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாநில எல்லையில் இருமாநில தொழிலாளர்களும் அச்சமின்றி பயணித்தனர். கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, தஸ்னா கர்நாடகா, மைசூர், சாம்ராஜ் நகர், தார்வார் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கடந்த 14ம் தேதியிலிருந்து இன்று காலை வரை முழு ஊரடங்கு அமலில் இருந்தது. ஒருவாரகால தீவிர ஊரடங்கு இன்று காலையுடன் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து வழக்கம் போல் கடைகள் மற்றும் வணிக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆட்டோ உள்ளிட்ட பொது போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி சுங்கச்சாவடியில் இ – பாஸ் உள்ளவர்களின் கார் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. அதேசமயம் இருசக்கர வாகனங்களில் வேளைக்கு செல்பவர்கள் அடையாள அட்டையை காண்பித்தால், கர்நாடகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் இருந்து வருபவர்கள் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கர்நாடகா அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதேபோன்று தமிழக எல்லையான ஜூஜூவாவடி சோதனைச்சாவடியில்  இ – பாஸ் வைத்துள்ள கார் மற்றும் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. நீண்ட இடைவெளிக்கு பின்னர் கர்நாடகத்தில் பணிக்கு செல்வது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக அங்குள்ள தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஈரோட்டில் செல்போனில் பப்ஜி விளையாடிய சிறுவன் மாரடைப்பில் உயிரிழந்தான்

Admin Main

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கர்நாடகாமதுபான பாக்கெட்டுகள் பறிமுதல்

Admin Main

Elderly woman gets separated from family during Taj Mahal visit. How Agra Police helps her

Admin Main

ஒரு கருத்தை விடுங்கள்