செய்திகள் வர்த்தகம்

1 நாளைக்கு ரூ.2.71 கோடி லாபம் – ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காட்டில் பணமழை – 100 நாட்கள் தொடர்ச்சியாக.
இந்தியாவின் வாரன் பஃபெட் என்றழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இந்திய சந்தைகளில் முதலீடு செய்பவர்களில் மிகவும் பிரபலமானவர்.

ஆப்டெக் லிமிடெட் கணினி மையத்தின் நிறுவனராகவும், பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர் குழுவிலும் பங்கு வகிப்பவர் ஜுன்ஜுன்வாலா. கடந்த 2018ம் ஆண்டு போர்ப்ஸ் பத்திரிகை புள்ளி விவரங்களின் படி, நாட்டின் 54வது பணக்காரராக ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இருந்தவர். பங்குச்சந்தையில் இவருடைய முதலீட்டின் மதிப்பு சுமார் 18,000 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது.ஒரு நாளைக்கு ரூ.2.71 கோடி வருமானம்

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இந்த ஆண்டு மார்ச் 23 முதல் 100 வர்த்தக தினங்களில் ஒரு நாளைக்கு 2.71 கோடி ரூபாய் வீதம், 100 நாட்களில் 271.09 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார் என் கிறது பிசினஸ் ஸ்டேண்டர்டு அறிக்கை. ஒரு மனுஷன் இவ்வளவு சம்பாதிக்க முடியுமா? எப்படி ஒரு இவ்வ:அவு வருமானமா? அப்படி என்ன முதலீடு வாருங்கள் அதனை பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். 

எதில் முதலீடு? எவ்வளவு பங்கு?

இந்த கட்டுரையில் ஆரம்பத்திலேயே படித்திருப்போம். இந்தியாவின் வாரன் பஃபெட் என்று, அப்போதே பலருக்கு தெரிந்திருக்கலாம் இது பங்கு சந்தை தான் என்று. ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவுக்கும் அவரது மனைவியும் சுமார் 39.75 லட்சன் பங்குகளை வைத்திருப்பதாக கிரிசில் மதிப்பீட்டு நிறுவனத்தில் வைத்திருப்பதாக கூறப்பட்டது. 

யாருக்கு எவ்வளவு பங்கு?

இதி ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் வசம் 21.06 லட்சம் பங்குகள் இருப்பதாகவும், இதே அவரின் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலாவின் வசம் 18.56 பங்குகள் இருப்பதாகவும் மார்ச் 2020 காலாண்டில் அறிவிக்கப்பட்டது. கடந்த மார்ச் 23 அன்று சென்செக்ஸ் நிஃப்டி இரண்டும் ஒரு நாளில் பெரும் வீழ்ச்சியினை கண்டன. அந்த நாளில் கிரிசிலின் பங்கு விலையானது பிஎஸ்இ-யில் 1083 ஆக முடிவுற்றது. அன்றைய நிலையில் ஜுன்ஜுன்வாலாவின் பங்கு மதிப்பானது 430.49 கோடி ரூபாயாகும்.இன்றைய விலை நிலவரம்

ஆனால் இன்றோ அந்த பங்கின் மதிப்பு என்ன தெரியுமா? கிரிசிலின் பங்கு விலையானது 1756 ரூபாயாகும். அதன் பங்கு மதிப்பானது 701.58 கோடி ரூபாயாகும். ஆக நூறு நாட்களில் அவரின் லாபம் 271.09 கோடி ரூபாயாகும். இதுவரையில் ஜுன்ஜுன்வாலாவின் தரப்பில் இருந்து எந்த பங்கு மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.போட்டி நிறுவனம்

இன்று வரையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 37.46% அதிகரித்துள்ளது. ஆனால் இது கடந்த ஆண்டோ 9.54% வீழ்ச்சி கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே இதன் போட்டி நிறுவனமான இக்ரா கடந்த 10 ஆண்டுகளில் 115% லாபம் கண்டுள்ளதாகவும், எனினும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 36% வீழ்ச்சி கண்டுள்ளதுள்ளதாகவும், இதே ஒரு வருடத்தில் 15.27% வீழ்ச்சியும் கண்டுள்ளது. இதே மார்ச் 23லிருந்து, இந்த இன்று வரையில் இதன் பங்கு விலையேற்றமானது 53.55% ஏற்றம் கண்டுள்ளது. 

Related posts

கோயம்புத்தூரில் 2,000 காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்

Admin Main

தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

Admin Main

புதிய அம்சங்களுடன் வருகிறது Whats App!

Admin Main

ஒரு கருத்தை விடுங்கள்