சேலம் மாநகரம் செவ்வாய்பேட்டை பங்களா தெருவை சேர்ந்த அலாவுதீன் என்பவரின் மகன் சாஜித் வயது 6.
இவர் திருவகவுண்டனூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தபோது வெளியே விளையாட சென்றவர் வழிதவறி பள்ளப்பட்டி காவல் நிலைய எல்லையான வித்யா மந்திர் பள்ளி அருகில் நின்றுகொண்டு வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் அழுது கொண்டிருந்த சிறுவனை, அவ்வழியாகச் சென்ற திருவகவுண்டனூர் காமராஜர் காலனியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி திரு.ஏழுமலை என்பவர் சிறுவனை விசாரிக்க, அவனுக்கு விலாசம் சொல்ல தெரியாததால் சிறுவனை பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
சிறுவனை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ் அவர்கள் உடனடியாக சேலம் மாநகரத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் VHF மைக் வாயிலாக சிறுவன் குறித்த தகவலை தெரியப்படுத்தி சிறுவனை பெற்றோர் வசம் ஒப்படைத்துள்ளார்.
அப்போது காவல் ஆய்வாளர் உங்கள் குழந்தையை கவனமுடன் பார்த்துக் கொள்ளுங்கள் என சிறுவனின் பெற்றோருக்கு அறிவுரை கூறினார்.
காவல் ஆய்வாளர் மற்றும் சிறுவனின் பெற்றோர் குழந்தையை காவல்நிலையத்தில் ஒப்படைத்த கட்டிட மேஸ்திரி திரு.ஏழுமலை என்பவரை மனதார பாராட்டினார்கள்.