குற்றவாளிகளை கைது செய்து தங்க நகைகளை மீட்ட காவல்துறை
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அர.அருளரசு¸ இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சிவக்குமார் அவர்களின் மேற்பார்வையில் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. மகேந்திரன் தலைமையிலான தனிப்படையினர் 20.08.2020 அன்று வாகன சோதனையில் ஈடுபட்டுவந்தனர்.
அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த நண்டுகாரன் மற்றும் பாண்டியன் என்பவர்களை கைது செய்து விசாரித்ததில் அவர்கள் பொள்ளாச்சி பகுதியில் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது மேலும் அவா்களிடமிருந்து சுமார் 55 ½ பவுன் தங்க நகையும்¸ ரூபாய் 1¸28¸000/- ரொக்கமும் கைப்பற்றப்பட்டு¸ நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.