செய்திகள்

சிலிக்கான் இதயம் 100% இதயத்தை போன்றே செயல்படும் செயற்கை இதயம் : விரைவில் சந்தைக்கு வருகிறது

நொடியில் மனிதனை சாய்த்து நிமிடத்தில் மரணத்தை ஏற்படுத்திவிடும் நோய்களில் முதன்மையாக இருப்பது இதய செயலிழப்பு, அல்லது மாரடைப்பு என்று கூறிவிடலாம். உலகம் முழுவதும் இதயம் செயலிழப்பு காரணமாக ஆண்டுக்கு ஒன்றரை கோடி உயிர்கள் பலியாகின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம். பெரும்பாலான மாரடைப்புகள், ரத்த நாளங்களில் அடைப்பு காரணமாக ஏற்படுகின்றன.இதற்கு ரத்த வால்வுகளில் அடைப்பு நீக்கம், ரத்த வால்வுகளை நீக்குதல், சிகிச்சைகள் மூலம் அடைப்புகள் சரி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டோரின் இதயத்தின் இயக்கத்தை மருத்துவர்கள் மீட்டு கொண்டு வருவது நாம் அறிந்த ஒன்று தான் ஆனால் இதயம் முற்றிலும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இருக்கும் ஒரே வழி இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே.மூளைச்சாவு அடைந்தவர்களின் இருந்து மட்டுமே இதயத்தை தானமாக பெற முடியும் என்பதால் அதற்காக பதிவு செய்து காத்திருக்கும் நோயாளிகளின் பட்டியல் மிக நீளமானது.இதே போன்று இதயம் செயலிழந்து மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் நோயாளிகளின் ஆயுளை நீட்டிக்க விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது செயற்கை இதயம. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கார்மெட் என்ற மருத்துவ ஆய்வு நிறுவனம் 20 ஆண்டு ஆராய்ச்சியின் பயனாக செயற்கை இதயம் ஒன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. மனிதனின் இதயத்தின் அளவையே கொண்டுள்ள இந்த செயற்கை இதயம் சிலிக்கானை உருவாக்கப்பட்டுள்ளது.3 D நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இது 390 கிராம் மட்டுமே எடை கொண்டது. மனித இதயத்தினை போலவே சுருங்கி, விரியும் வலது மற்றும் இடது வென்ட்ரிக்கல்கள் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.அழுத்தம் ஏற்படுத்தப்பட்ட காற்றுப்பும் மூலம் செயற்கை இதயத்தின் துடிப்பினை ஆராய்ச்சியாளர்கள் ஏற்படுத்தியுள்ளனர். இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக ஒரு நோயாளியின் இதயம் நீக்கப்பட்டு மாற்று இதயம் பொருத்தப்படும் வரை இதயத்தின் வேலைகள் அனைத்தையும், இந்த கருவி செய்துகொண்டிருக்கும், மேலும் இதய செயலிழப்பு ஏற்பட்டுள்ள ஒருவருக்கு மாற்று இதயம் கிடைக்க தாமதம் ஏற்பட்டால் அதுவரை பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிர்களை இந்த செயற்கை இதயம் காப்பாற்றும் என்கிறார்கள் பிரான்ஸ் மருத்துவ வல்லுநர்கள்.இது வரவேற்க கூடிய மிகவும் அவசியமான கண்டுபிடிப்பு என்று கூறும் தமிழக மருத்துவர்கள் செயற்கை இதயம் இந்தியாவை எட்ட நீண்ட காலமாகும் என்பதுடன் இதனால் ஏற்படும் செலவுகள் வெறும் செல்வந்தர்களுக்கு மட்டுமே சாத்தியப்படும் என்கிறார்கள். மனித இதயத்தை போன்றே செயல்படுவது 100% உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மருத்துவ உபகரண இதற்க்கு பச்சைக்கொடி காட்டிவிட்டன. எனவே இந்த ஆண்டின் இறுதியில் சர்வதேச அளவில் தனது செயற்கை இதயத்தை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது பிரான்சின் கார்மெட் நிறுவனம்.Related posts

நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

Admin Main

மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டுக்கு மொத்த காய்கறி மார்க்கெட் இடமாற்றம்

Admin Main

வெப்ப சலனம் காரணமாக 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

Admin Main

ஒரு கருத்தை விடுங்கள்