சினிமா செய்திகள்

அச்சு அசல் கிராமத்து பெண்ணாக மாறிய விஜய் டிவி பிரபலம்விஜய் டிவி தொகுப்பாளர் ரம்யா ஒரு படத்திற்காக தற்போது கிராமத்து பெண் போல மாறி இருக்கிறார்.விஜய் டிவி-யில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் வி.ஜே.ரம்யா. ஃபிட்னெஸில் ஆர்வமுள்ள இவர் பளு தூக்கும் போட்டிகளிலும் கலந்துக் கொள்கிறார்.
அதோடு, ஃபிட்னெஸ் மற்றும் லைஃப்ஸ்டைல் தொடர்பான விஷயங்களை தனது யூ-ட்யூப் சேனல் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொள்கிறார்.தற்போது விஜய் டிவி-யை விட்டு விலகியிருக்கும் ரம்யா திரைப்படங்களில் தனது கவனத்தைத் திருப்பியுள்ளார்.

அமலா பாலின் ஆடை திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர், சமீபத்தில் வெளியான விஜய்யின் மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனனின் தோழியாக நடித்திருந்தார்.தவிர, சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் அச்சு அசலாக இருக்கும் தனது படங்களைப் பகிர்ந்துள்ளார் ரம்யா.

அது சங்கத்தலைவன் படத்திற்கான லுக் என தெரிய வருகிறது. அந்தப் படத்துடன், “திரையுலகில் எனக்கு முதல் திரைப்படமாக அமைந்த படம்.இன்று வெளிவருவதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.சங்கத்தலைவன் திரைப்படத்தை உதயம் NH4 இயக்குநர் மணிமாறன் இயக்கியுள்ளார்.
வெற்றிமாறன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, வி.ஜே.ரம்யா, கருணாஸ், சுனு லட்சுமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.Related posts

Police seek contempt of court action against Harsh Mander over speech at Jamia

Admin Main

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிவேகமாக பரவி வருவதன் காரணமாக கிராம வாசிகளுக்கு உதவிய பெண் காவல் ஆய்வாளர்.

Admin Main

கொரோனா வைரஸ் ஊரடங்கு சமயத்தில் குறும்படத்தை இயக்கிய நடிகை

Admin Main

ஒரு கருத்தை விடுங்கள்