செய்திகள் வர்த்தகம் வாகனங்கள்

பொருளாதார விலை உயர வாய்ப்பு ,தமிழகத்தில் 26 சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்ந்தது 5 முதல் 30 வரை கட்டணம் அதிகரிப்பு, சரக்கு லாரி, ஆம்னி பஸ்களின் கட்டணம் உயர வாய்ப்பு

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 565 சுங்கச்சாவடிகள் உள்ளன.இதில், தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளது.
இந்த சுங்கச்சாவடிகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி 22 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இதை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் நேற்று முதல் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, கன்னியூர் (கோவை), பட்டறை பெரும்புதூர் (திருத்தணி) சூரப்பட்டு (திருவள்ளூர்), வானகரம் (திருவள்ளூர்), பரனூர்(செங்கல்பட்டு), ஆத்தூர் (திண்டிவனம்), கிருஷ்ணகிரி, சாலைபுதூர் (தூத்துக்குடி), பள்ளிகொண்டா (வேலூர்), வாணியம்பாடி (வேலூர்), எட்டூர் வட்டம் (விருதுநகர்), கப்பலூர் (மதுரை), நாங்குநேரி (நெல்லை), புதுக்கோட்டை, சிட்டம்பட்டி(திருச்சி), பூதக்குடி (மதுரை), லெம்பலாக்குடி( சிவகங்கை), லட்சுமணப்பட்டி (சிவகங்கை), பெரும்புதூர் (காஞ்சிபுரம்), சென்னசமுத்திரம் (காஞ்சிபுரம்), கிருஷ்ணகிரி, நல்லூர் (சென்னை) மேட்டுப்பட்டி (உளுந்தூர்பேட்டை)  உட்பட 26 சுங்கசாவடிகளில் 5 முதல் 30 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தற்போது தான் மீண்டு வந்து கொண்டு இருக்கின்றனர்.

இந்த நேரத்தில் சுங்க கட்டண உயர்வு அவர்களுக்கு மேலும் பொருளாதார சுமையை ஏற்படுத்தும் என்று கட்டண உயர்வுக்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் சுங்கக்கட்டணம் அதிகரித்தால் லாரி வாடகை அதிகரித்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறுகையில், ‘சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் கட்டணம் தொடர்ந்து உயர்த்தி கொண்டே வருகின்றனர்.
இதுவரை 234 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. வாகனங்கள் அதிகமாகும் போது சுங்கச்சாவடிகளில் கட்டணம் குறைக்க வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
ஆனால், எதையும் அவர்கள் செய்யவில்லை. சுங்கச்சாவடி மூலம் கோடிக்கணக்கில் முறைகேடு நடக்கிறது. மதுரவாயல் சுங்கச்சாவடி சாலைகளில் மின்விளக்கே கிடையாது. காலவாதியாகி 10 வருடங்கள் ஆகி விட்டது.
அந்த சுங்கச்சாவடிகளில் இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாட்டிலேயே தேசிய நெடுஞ்சாலையில் தான் 53 சதவீதம் விபத்து நடக்கிறது. இதில், தமிழகத்தில் தான் அதிகப்படியான விபத்து நடக்கிறது. அவ்வாறு பராமரிப்பின்றி கிடக்கும் இந்த சாலைகளுக்கு சுங்கச்சாவடி கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தி கொண்டே இருப்பது கண்டிக்கத்தக்கது’ என்றார்.
சுங்கச்சாவடிகளில் கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளும் நடைபெறாமல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருவது வருத்தம் அளிப்பதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திண்டிவனம் ஆத்தூரில் எவ்வளவு உயர்வு?
103 கி.மீ நீளம் கொண்ட திண்டிவனம் ஆத்தூர் சுங்கச்சாவடியில் ஒரு தடவை செல்ல கார், ஜீப், வேன் ஆகிய வாகனத்துக்கு 60, இலகுரக சரக்கு வாகனம், மினி பஸ்சுக்கு 95, பஸ் அல்லது டிரக் 195ல் இருந்து 200 ஆகவும், மூன்று அச்சுக்கு கொண்ட வர்த்தக வாகனம் 210ல் இருந்து 220 ஆகவும், கனரக வாகனம் 305ல் இருந்து 315 ஆகவும், பெரிதாக்கப்பட்ட வாகனம் (ஏழு அச்சு அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுகள்) 370ல் இருந்து 385 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
திருவள்ளூர் சூரப்பட்டில் கட்டணம் எவ்வளவு?
சூரப்பட்டு சுங்கச்சாவடியில் ஒரு தடவை செல்ல கார், ஜீப், வேன் ஆகிய வாகனத்துக்கு 60, இலகு ரக வர்த்தக வாகனம், இலகுரக சரக்கு வாகனம், மினி பஸ்சுக்கு 95லிருந்து 100. லாரி, ஆம்னி பஸ் 200லிருந்து 210. 3 ஆக்ஸில் வர்த்தக வாகனம் 220லிருந்து 225 ஆகவும், கனரக வாகனம் 315லிருந்து 325. பெரிதாக்கப்பட்ட வாகனம் 4385லிருந்து 395 ஆகவும் கட்டணம் உயரும். இந்த கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
சென்னை வானகரத்தில் கட்டணம் எகிறியது
வானகரம் சுங்கச்சாவடிக்கு ஒரு தடவை செல்ல கார், ஜீப், வேன் ஆகிய வாகனத்துக்கு 45, இலகு ரக வர்த்தக வாகனம், இலகுரக சரக்கு வாகனத்துக்கு 70,  லாரி, ஆம்னி பஸ் 145ல் இருந்து 150 ஆகவும், 3 ஆக்ஸில் வர்த்தக வாகனம் ₹160ல் இருந்து 165 ஆகவும், கனரக வாகனம் 225லிருந்து 235 ஆகவும், பெரிதாக்கப்பட்ட வாகனம் 275லிருந்து 285 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இருதடவை செல்ல ஆம்னி பஸ்சுக்கு 220லிருந்து 225 ஆகவும், 3 ஆக்ஸில் வர்த்தக வாகனத்துக்கு 235லிருந்து 245 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.Related posts

கொரோனா தடுப்புப் பணிக்கு ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்கள் தேவை – தமிழக காவல்துறை

Admin Main

ரூ.15 லட்சம் நிதியை திரட்டி இறந்த காவலரின் குடும்பத்திற்கு அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The Duthal

தமிழகத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு தலா ரூ.2,000 உதவித்தொகை

Admin Main

ஒரு கருத்தை விடுங்கள்