சினிமா செய்திகள்

நடிகை ராஷ்மிகா மந்தனா இன்று தனது 25ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்
நடிகை ராஷ்மிகா மந்தனா இன்று தனது 25ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்
இதையடுத்து, அவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தெலுங்கில், கீதா கோவிந்தம் படத்தில் வரும் ‘இன்கேம் இன்கேம்’ பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ராஷ்மிகா பெற்றார்.
கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாக உள்ள நடிகை ராஷ்மிகா .
கீதா கோவிந்தம் படத்தில் வரும் இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலே பாடலின் மூலம் இந்தியா முழுவதும் டிரெண்ட் ஆனார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
2020ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான மகேஷ் பாபுவின் சரிலேறு நீக்கு எவ்வரு படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.
கர்நாடக மாநிலத்தில் 1996ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி பிறந்த நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு இன்றுடன் 24 வயதாகிறது.
தனது 20 வயதிலேயே கன்னட படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.
இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின்றன.
2016ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் சினிமா உலகில் நாயகியாக என்ட்ரியான ராஷ்மிகா மந்தனா, 2018ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் படம் 100 கோடி கிளப்பில் இணைந்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
தொடர்ந்து தேவதாஸ், யஜமானா, டியர் காம்ரேட் என தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் செம பிசியாக நடித்து வந்த ராஷ்மிகாவுக்கு ஜாக்பாட் அடித்தது போல, தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் சரிலேறு நீக்கெவ்வரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான அந்த படம் 200 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ராஷ்மிகாவின் பிறந்தாளை அவரது ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்
Related posts

கிருஷ்ணகிரி மாவட்டம். நலிவடைந்த 100 குடும்பங்களுக்கு நிவாரணபொருட்கள்.

Admin Main

வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு பயிர் கடன்

The Duthal

தமிழகத்தில் புதிதாக  805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,802 -ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை.

Admin Main

ஒரு கருத்தை விடுங்கள்