சுற்றுலா செய்திகள் வாகனங்கள்

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரம் அடைந்த நிலையிலும் ரயில்வே சேவை தொடரும்
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாகி உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவலைத் தொடர்ந்து ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்லும் அவலத்திற்கு தள்ளப்பட்டனர்.
தற்போது, 2வது அலை அதிகரிக்கும் நிலையில், ஊரடங்கு விதிக்கப்பட்டு மீண்டும் ரயில் சேவை நிறுத்தப்படுமோ என்ற அச்சம் நிலவுவதால், ரயில்களில் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகளவில் பயணம் செய்வதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இது பற்றி ரயில்வே வாரிய தலைவர் சுனீத் சர்மா கூறுகையில், ‘‘ரயில்களை திடீரென நிறுத்துவதோ அல்லது சேவையை குறைக்கும் திட்டமோ இல்லை.
தேவைக்கேற்ப ரயில்களை இயக்குவோம். எனவே, அச்சப்பட தேவையில்லை. பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தால், கூடுதல் ரயில்களை இயக்க தயாராக உள்ளோம். ரயில் பயணத்திற்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கோரும் திட்டமும் இல்லை. ரயில்களை ரத்து செய்யும்படி மகாராஷ்டிரா அரசு கோரிக்கை விடுக்கவில்லை,’’ என்றார்.
Related posts

நாயகனாகும் குக் வித் கோமாளி அஸ்வின் | காமெடியனாக புகழ் ஒப்பந்தம்

The Duthal

அடிப்படை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ola, uber உள்ளிட்ட கால் டாக்சி ஓட்டுனர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

Admin Main

திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமியின் உருவப்பொம்மையை எரித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்

Admin Main

ஒரு கருத்தை விடுங்கள்