செய்திகள் வர்த்தகம்

அதானி குழுமத்துடன் இணைவதாக ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட் அறிவித்துள்ளது
அதானி குழுமத்துடன் இணைவதாக ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட் அறிவித்துள்ளது.
உள்நாட்டில் தங்கள் நிறுவனத்தின் விநியோக சங்கிலி உட்கட்டமைப்பை வலுப்படுத்தவும் வேகமாக வளர்ந்து வரும் தங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் திறனை மேலும் மேம்படுத்தவும் அதானி லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ஃபிளிப்கார்ட் இணைந்து செயல்படும் என அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே பொருட்களை வாங்கும் வசதிகொண்ட ஒரு பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஃபிளிப்கார்ட் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதானி குழுமத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
மேலும் ஃபிளிப்கார்ட் நிறுவனம் தனது மூன்றாவது டேட்டா சென்டரை சென்னையில் உள்ள அதானி கோனர்ஸ் நிறுவனத்தில் நிறுவ உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு உதவும் நோக்கில் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலம் சுமார் 2,500 பேருக்கு நேரடியாகவும், பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என ஃபிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
Related posts

இந்த மாதம் மட்டும் 39 சிறப்பு விமானங்கள் மூலம் 5,489 வெளிநாட்டினர் பயணம்

Admin Main

நிருபர்¸ வக்கீல்¸ போலீஸ் அதிகாரி என ஆள்மாறாட்டம் செய்து பணம் பறித்தவர் கைது

Admin Main

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலமாக கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Admin Main

ஒரு கருத்தை விடுங்கள்