சினிமா செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் கனிக்கு ரூ5 லட்சம் பரிசு
தமிழகத்தில் ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் காமெடியுடன் வரும் கலக்கலான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரைஅனைவரிடமும் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஒளிபரபரப்பாகி வரும் இந்த ரியாலிட்டி ஷோக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம. மேலும் 2019-ம் ஆண்டு ஒளிபரப்பான முதல் சீசனில், வனிதா விஜயகுமார், உமா ரியாஸ்கான், ரம்யா பாண்டியன், ரேகா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் வனிதா விஜயகுமார் சாம்பியன் பட்டம் வென்றார்.


தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் இருந்து இந்த நிகழ்ச்சியின் 2-வது சீசன் தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில், அஸ்வின், பாபா பாஸ்கர், கனி, பவித்ரா லட்சுமி, ஷகீலா, மதுரை முத்து உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டுள்ள நிலையில் கோமாளிகளாக பாலா, மணிமேகலை, டைகர் தங்கதுரை, புகழ், ஷிவாங்கி, பார்வதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். இதில் ஷிவாங்கி மற்றும் புகழ் இருவரும் செய்யும் சேட்டைகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், டைகர் தங்கதுரையின் ஜோக்குகள் சக நடிகர்களையே கலாய்க்கும் அளவுக்கு உள்ளது.

தொடர்ந்து இந்த நிகழச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த மாத தொடக்கத்தில் இந்நிகழ்ச்சியின் அரையிறுதி சுற்றுகள் நடைபெற்றது. இதில் அஸ்வின் கனி, பாபா பாஸ்கர், ஆகிய மூவரும் நேரடியாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய நிலையில், பவித்லா லட்சுமி, ஷகீலா இருவரும் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருவதால் இதை விரைவில் முடிக்க வேண்டாம் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் கடந்த 2 வாரங்களாக புதிய முயற்சிகள் ஒளிபரப்பாகியது.
இதனையடுத்து இந்நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று தமிழ் புத்தாண்டு தினமான இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு 5 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts

கடல் கடந்து வரும் ஏர் ஆம்புலன்ஸ் – புற்றுநோயால் உயிருக்கு போராடும் வங்கி பணியாளர்

Admin Main

கரூர் மாவட்டம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. கார்த்திகேயன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் இருக்கும் முதியவருக்கு அவரது வீட்டிற்கு நேரில் சென்று பண உதவி செய்தார்

Admin Main

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஊரடங்கில் சிறப்பாக பணியாற்றிய கோபி காவல் துறை

Admin Main

ஒரு கருத்தை விடுங்கள்