சினிமா செய்திகள்

நாயகனாகும் குக் வித் கோமாளி அஸ்வின் | காமெடியனாக புகழ் ஒப்பந்தம்
தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகிறார் ‘குக் வித் கோமாளி’ பிரபலம் அஸ்வின்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்துள்ள நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி 2’. சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி இதுதான்.
இதில் போட்டியாளர்களாகக் கலந்துகொண்ட அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகிலா, கனி, பவித்ரா மற்றும் கோமாளிகளாகக் கலந்துகொண்ட சிவாங்கி, புகழ், பாலா உள்ளிட்ட அனைவருக்குமே தனி ரசிகர் கூட்டம் உண்டு.
இதில் அஸ்வின், சிவாங்கி, புகழ் ஆகியோருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது. இதனால் சிவாங்கி மற்றும் புகழ் இருவருமே பல்வேறு படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். தற்போது அஸ்வின் நாயகனாக அறிமுகமாகவுள்ளார்.
இந்தப் படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு நேற்று (ஏப்ரல் 14) வெளியிடப்பட்டது. ஹரிஹரன் இயக்கவுள்ள இந்தப் படம் முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகவுள்ளது.
இந்தப் படத்தில் அஸ்வினுடன் புகழும் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இருவரும் இணைந்து வெள்ளித்திரையிலும் நடிக்கவுள்ளதை மகிழ்ச்சியாக வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.
Related posts

டாஸ்மாக் திறப்பு தொடர்பாக மேல்முறையீட்டை எதிர்த்து வைகோ  மனுத்தாக்கல்

Admin Main

ஈரோடு ஹலோ சீனியர்ஸ் திட்டத்தில் பயன்பெற அழையுங்கள் 9655888100 

Admin Main

பிரபல இந்தி நடிகர் இர்பான் கான் உடல்நல குறைவால் காலமானார்

Admin Main

ஒரு கருத்தை விடுங்கள்