சினிமா செய்திகள்

2011-ம் ஆண்டு 21G அரசு பேருந்தில் பயணம் |  2021-ல் BMW GT வகை சொகுசு காரில் பயணம்
 

2011-ம் ஆண்டு 21G அரசு பேருந்தில் பயணம் |  2021-ல் BMW GT வகை சொகுசு காரில் பயணம்
விலையுயர்ந்த சொகுசு கார் வாங்கிய ரம்யா பாண்டியன்
அதைத்தொடர்ந்து பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியின் இறுதி வரை வந்த ரம்யாவுக்கு 4-ம் இடம் கிடைத்தது.
இந்நிலையில் அடுத்ததாக சூர்யாவின் 2டி ன்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கும் இந்தப் படத்தில் வாணி போஜனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும், இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமாகிறார் நடிகர் மிதுன் மாணிக்கம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

 


இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரம்யா பாண்டியன் விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ கார் வாங்கியிருப்பதாக அவரது சகோதரர் பரசு பாண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நீல நிறத்தில் இருக்கும் அந்த கார் கெத்தாக நின்றபடி ரம்யா போட்டோவுக்கு போஸ் கொடுக்க பிளேட்டில் RPBMW4 என்கிற எண் ஒட்டப்பட்டுள்ளது.
2011-ம் ஆண்டு 21G அரசு பேருந்தில் பயணித்ததாகவும் 2021-ல் பிஎம்டபிள்யூ ஜிடி வகை சொகுசு காரை வாங்கியிருப்பதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து பிக்பாஸில் பங்கேற்ற சம்யுக்தா வாழ்த்து தெரிவித்து கமெண்ட் பதிவிட ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ரம்யா பாண்டியன் வாங்கியிருக்கும் காரின் விலை ரூ.70 லட்சத்துக்கும் அதிகம் என கூறப்படுகிறது.
Related posts

வெளி மாநில தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கபடுமா?

Admin Main

அரியலூர் மாவட்ட காவல்துறை‌ சார்பில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்‌ மற்றும் பரிசுத்தொகை வழங்கினார்.

Admin Main

தமிழகத்தில் இ பாஸ் முறை மீண்டும் அமலாகிறது

The Duthal

ஒரு கருத்தை விடுங்கள்