செய்திகள்

பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியாவிற்கு 142 வது இடம் நார்வே முதலிடம்

பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியாவிற்கு 142 வது இடம் நார்வே முதலிடம் .

 

எல்லைகளற்ற நிருபர்கள்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள உலக பத்திரிகை சுதந்திர குறியீடு அட்டவனையில், இந்தியா 142-வது இடத்தை இந்தாண்டும் தக்க வைத்து மோசமான நிலையில் தொடர்வதாக கூறியுள்ளது.
180 நாடுகள் பட்டியல்

பத்திரிகை சுதந்திரம் பற்றி வெளியிடப்பட்ட 180 நாடுகள் கொண்ட பட்டியலில் நார்வே முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து பின்லாந்து, டென்மார்க் ஆகியவை 2 மற்றும் 3-ம் இடங்கள் பிடித்துள்ளன. கிழக்கு ஆப்ரிக்க நாடான எரித்ரியா பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. நமது அண்டை நாடுகளான சீனா 177-வது இடத்திலும், பாகிஸ்தான் 145, நேபாள் 106, இலங்கை 127, வங்கதேசம் 152-ம் இடமும் பெற்றுள்ளன.
இந்தியாவானது பத்திரிகை சுதந்திரத்தில் பிரேசில், மெக்சிகோ மற்றும் ரஷ்யாவுடன் மோசமான வகைப்பாட்டை பகிர்ந்து கொள்கிறது என அந்த அமைப்பின் அறிக்கையில் கூறியுள்ளனர்.

எந்த ஒரு பத்திரிகையாளர் இந்தியாவில் விமர்சனங்களை வைத்தாலும் பா.ஜ.க., ஆதரவாளர்களால் தேச விரோதிகள் மற்றும் அரசுக்கு எதிரானவர்கள் என மிரட்டப்படுவதாக என அதில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிரதமர் மோடி ஊடகங்கள் மீதான தனது பிடியை இறுக்கி வருகிறார். 2020-ல் நான்கு பத்திரிகையாளர்கள் தங்கள் பணிக்காக இந்தியாவில் கொல்லப்பட்டிருக்கிறார்கள் எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
Related posts

சேலம் மாவட்டத்தில் 2020 – 2021 ஆண்டிற்கான பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தில்

Admin Main

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5,795 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும்  116 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 6,123 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,55,449  எட்டியது.

The Duthal

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

Admin Main

ஒரு கருத்தை விடுங்கள்