செய்திகள்

கைலாசாவில் இந்திய பக்தர்களுக்கு அனுமதியில்லை – நித்தியானந்தா தடாலடி!





கைலாசாவில் இந்திய பக்தர்களுக்கு அனுமதியில்லை – நித்தியானந்தா தடாலடி!




கொரோனா நோய்த்தொற்று பரவலின் இரண்டாம் அலை இந்தியாவில் தீவிரம் அடைந்துள்ளதால் இந்தியாவிலிருந்து கைலாசா வரும் பக்தர்களுக்குத் தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகப் நித்தியானந்தா அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்





பாலியல் புகார், ஆள் கடத்தல் வழக்குகள் எனப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிப் பிரபலமானவர் நித்தியானந்தா. சமீபத்தில் கைலாசா என்ற பெயரில் தனித் தீவு ஒன்றினை உருவாக்கி, அதற்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அனைத்தையும் அறிவித்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியிருந்தார்.




மேலும், கைலாசாவில் வியாபாரம் செய்வதற்கான வழிவகைகளையும் அறிவித்திருந்தார். அதைப் பார்த்து கைலாசாவில் ஹோட்டல், டீ கடை எனத் தொழில் செய்து பிழைக்க பலர் நித்தியானந்தாவுக்கு விண்ணப்பங்கள் அனுப்பியிருந்தனர்.




இது ஒருபுறமிருப்பினும் இன்றுவரை இந்த கைலாசா எங்கே இருக்கிறது என்பது புதிராகவே இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் அருகாமையில் உள்ள தனித் தீவு ஒன்றினை, நித்தியானந்தா சொந்தமாக வாங்கி ‘கைலாசவாக’ மாற்றியிருக்கிறார் என்று பேசப்பட்டு வருகிறது. கைலாசாவில் குடியேறிய நித்தியானந்தா அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சமீபமாக அவர் திருப்பதி ‘ஏழுமலையான்’ வேடத்தில் வெளியிட்ட சர்ச்சை புகைப்படங்கள் இணையத்தில் பெரிய அளவில் வைரலானது. அதன் அதிர்வலைகள் அடங்குவதற்குள் தற்போது இந்தியர்களுக்கு கைலாசாவில் ‘நோ – என்ட்ரி’ என்று அடுத்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.





நேற்று முன்தினம் (19.04.2021), நித்தியானந்தாவின் கைலாசா நிர்வாகத்தின் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருந்தது. அதில், கொரோனா நோய்த்தொற்றின் பரவல் பல நாடுகளில் தீவிரமடைந்துள்ளதால் கைலாசா நாட்டிற்கு இந்தியா, ஐரோப்பிய யூனியன், மலேசியா, பிரேசில் என நோய்ப் பரவல் மிகுதியாக உள்ள நாடுகளிலிருந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கைலாசாவில் தங்களை ஐக்கியப் படுத்திக் கொண்டிருக்கும் அனைவரும் இந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்தும் படி கேட்டுக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.




அறிவிப்பு என்னவோ சீரியஸாக இருந்தாலும், சமூகவலைத்தளங்களில் ‘ஆளே இல்லாத டீ கடையில – யாருக்கு டா டீ ஆத்துறார்’ என்று நகைப்புரியதாகவே பார்க்கப்படுகிறது.




Related posts

கொரோனாவுக்கு எதிரான ஊரடங்கு உத்தரவு காலத்தில் நேரத்தை எவ்வாறு பயனுள்ளதாக கழிப்பது

Admin Main

தமிழகத்தில் இன்று 161 பேருக்கு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,323-ஆக உயர்வு: சுகாதாரத்துறை

Admin Main

கன்னியாகுமரி மாவட்டம் கொரோனா வைரஸ் தடுக்கும் விதமாக தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்ட face shield-களை நாகர்கோவில் உட்கோட்ட போக்குவரத்து காவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் திரு. சரவணகுமார் அவர்கள் வழங்கினார்கள்

Admin Main

ஒரு கருத்தை விடுங்கள்