கொரோனா ஊரடங்கு காரணமாக 20 மாதங்களுக்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றம் முழுமையாக செயல்பட தொடங்கியது

கொரோனா ஊரடங்கு காரணமாக 20 மாதங்களுக்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றம் முழுமையாக செயல்பட தொடங்கியது

கொரோனா ஊரடங்கு காரணமாக 20 மாதங்களுக்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றம் முழுமையாக செயல்பட தொடங்கியது

Spread the love

20 மாதங்களுக்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றம் முழுமையாக செயல்பட தொடங்கியதால் வழக்கறிஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக காணொலி காட்சி வாயிலாக மட்டுமே வழக்கு விசாரணை நடைபெற்று வந்தன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் மட்டுமே நேரில் ஆஜராகி வாதிட்டு வந்தனர். தற்போது நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதை அடுத்து அனைத்து வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Also Read : ONGC நிறுவனத்தில் 300+ காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

இன்று நேரடி விசாரணை மற்றும் காணொலி காட்சி ஆகிய 2 முறைகளிலும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் சங்க அலுவலகங்களும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.