Dr. அப்துல் கலாம் இன்று 7ஆம் ஆண்டு நினைவு தினம்

தேடுதல் Dr. அப்துல் கலாம் இன்று 7ஆம் ஆண்டு நினைவு தினம்

தேடுதல் Dr. அப்துல் கலாம் இன்று 7ஆம் ஆண்டு நினைவு தினம்

Spread the love

மக்கள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜெ அப்துல்காலமின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் ட்விட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ஏவுகணை நாயகரான டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் இந்திய விண்வெளித்துறைக்கு மகத்தான பங்களிப்பை செய்துள்ளார். மக்களின் குடியரசுத் தலைவர் என அழைக்கப்பட்ட அவர், இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக 2002 முதல் 2007 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

குடியரசுத் தலைவர் பொறுப்புக்குப் பின் பள்ளி மற்றும் கல்லூரிகளில் எழுச்சியுரை ஆற்றி வந்தார். 2015ம் ஆண்டு ஷில்லாங்கில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்டில் மாணவர்களிடையே உரையாடிக் கொண்டிருந்தபோது, ஜூலை 27ம் தேதியான இதே நாளில் காலமானார்.

இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், ‘இளைய சமுதாயத்தினரிடம் புது எழுச்சியையும், நம்பிக்கையையும் விதைத்த ஏவுகணை நாயகர், முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள் இன்று.

எல்லா வகையிலும் தன்னிறைவு பெற்ற வல்லரசு நாடாக நம் தேசம் உருவாக வேண்டும் என்ற கலாம் அவர்களின் கனவை நனவாக்க உழைத்திடுவோம் என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழினத்தின் அறிவியல் அடையாளம்! நமது ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!’ என்று ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் அப்துல்கலாமிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அந்த பதிவில்,’ராமேஸ்வரத்தில் பிறந்த ராக்கெட் விஞ்ஞானி, ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம், சாமானிய குடும்பத்தில் பிறந்த சாம்ராட்.

மதம் மொழி சாதி பிரிவு பிறப்பிடம் என வரம்புகளுக்குள் அடங்காத அறிவுச் சூரியன்! இறைவனை பகுத்தாய்ந்த வள்ளலார் இறைவனோடு கரைந்து விட்டார். மேகவெளியை பகுத்தாய்ந்த கலாம் ஐயா மேகாலயத்தில் மறைந்துவிட்டார். விண்வெளி, அணுமின் ஆற்றல், ராக்கெட்டுகள், ஏவுகணைகள் ஆகிய துறைகளின் விஞ்ஞானியாக, ஆராய்ச்சியாளராக, ஆசிரியராக, இந்திய குடியரசுத் தலைவராக அக்கினி சிறகுகள் விரித்தவரே…

40க்கும் மேற்பட்ட முனைவர் பட்டங்கள் பெற்று, பத்மபூஷன் ஆகி, பத்ம விபூஷன் ஆகி, இன்னும் பெறற்கரிய பலப்பல சர்வதேச விருதுகள் பெற்ற பாரதத்தின் ரத்தினமே. இந்திய இளைஞர்களுக்காக, 2011ல் ஊழலை ஒழிக்க ‘நான் என்ன தர முடியும்’ என்ற இயக்கத்தைத் தொடங்கினீர்கள்.

உங்களால் உருவாக்கப்பட்ட ஊழல் ஒழிக்கும் படையில் ஒருவனாக வணங்குகிறேன். வாழ்த்துங்கள். வழிகாட்டுங்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் தேடுதல் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்

Also Follow @ Facebook , Instagram , Twitter , Youtube , Sharechat , Webiste , Telegram