மகளிர் டி20 உலக கோப்பை 2023: முழு அட்டவணை வெளியீடு- பிப்.12ல் இந்தியா- பாகிஸ்தான் பலப்பரீட்சை

Spread the love

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் பெண்களுக்கான 8-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு தென் ஆப்ரிக்க மண்ணில் பிப். 10 முதல் 26 வரை நடக்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான போட்டி அட்டவணையை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது.

இந்த தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி ‘குரூப் 2’ல் இடம் பெற்றுள்ளது. இதில் இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து அணிகளும் உள்ளன.

குரூப் 1’ல் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, இலங்கை, வங்கதேச அணிகள் உள்ளன. இந்திய அணி பிப். 12ல் தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை (இடம்: கேப்டவுன்) சந்திக்கவுள்ளது.

அடுத்தடுத்த போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் (பிப். 15), இங்கிலாந்து (பிப். 18), அயர்லாந்து (பிப். 20) அணிகளை இந்திய அணி சந்திக்கிறது.

மகளிர் டி20 உலகக் கோப்பையின் முழு அட்டவணை

பிப்ரவரி 10 தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை-கேப்டவுன்

பிப்ரவரி 11 வெஸ்ட் இண்டீஸ் v இங்கிலாந்து- பார்ல்

பிப்ரவரி 11 ஆஸ்திரேலியா v நியூசிலாந்து- பார்ல் பிப்ரவரி 12 இந்தியா v பாகிஸ்தான்- கேப் டவுன்

பிப்ரவரி 12 பங்களாதேஷ் மற்றும் இலங்கை- கேப்டவுன்

பிப்ரவரி 13 அயர்லாந்து v இங்கிலாந்து- பார்ல்

பிப்ரவரி 13 தென்னாப்பிரிக்கா v நியூசிலாந்து- பார்ல்

பிப்ரவரி 14 ஆஸ்திரேலியா v பங்களாதேஷ்

பிப்ரவரி 15 வெஸ்ட் இண்டீஸ் v இந்தியா- கேப் டவுன்

பிப்ரவரி 15 பாகிஸ்தான் v அயர்லாந்து- கேப் டவுன்

பிப்ரவரி 16 இலங்கை v ஆஸ்திரேலியா

பிப்ரவரி 17 நியூசிலாந்து v பங்களாதேஷ்- கேப் டவுன்

பிப்ரவரி 17 வெஸ்ட் இண்டீஸ் v அயர்லாந்து கேப் டவுன்

பிப்ரவரி 18 இங்கிலாந்து v இந்தியா

பிப்ரவரி 18 தென்னாப்பிரிக்கா v ஆஸ்திரேலியா 19 பிப்ரவரி பாகிஸ்தான் v வெஸ்ட் இண்டீஸ்- பார்ல்

பிப்ரவரி 19 நியூசிலாந்து v இலங்கை- பார்ல்

பிப்ரவரி 20 அயர்லாந்து v இந்தியா

பிப்ரவரி 21 இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான்-கேப் டவுன் பிப்ரவரி 21 தென்னாப்பிரிக்கா v பங்களாதேஷ்- கேப் டவுன்

பிப்ரவரி 23 அரை-இறுதி 1 கேப் டவுன்

பிப்ரவரி 24 – ரிசர்வ் டே கேப் டவுன்

பிப்ரவரி 24 அரை-இறுதி 2 கேப் டவுன்

பிப்ரவரி 25 ரிசர்வ் டே கேப் டவுன்

பிப்ரவரி 26 இறுதி கேப் டவுன்

பிப்ரவரி 27 ரிசர்வ் டே கேப் டவுன்