சிறார் நீதி வாரியத்தில் வேலை – பெண்களும் விண்ணப்பிக்கலாம் | KANCHEEPURAM JUVENILE JUSTICE BOARD WOMEN CAN ALSO APPLY

சிறார் நீதி வாரியத்தில் வேலை - பெண்களும் விண்ணப்பிக்கலாம் | KANCHEEPURAM JUVENILE JUSTICE BOARD WOMEN CAN ALSO APPLY

சிறார் நீதி வாரியத்தில் வேலை - பெண்களும் விண்ணப்பிக்கலாம் | KANCHEEPURAM JUVENILE JUSTICE BOARD WOMEN CAN ALSO APPLY

Spread the love

இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூக நல உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்கான கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளை கொண்ட நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

Sara saloon

2015ம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ) சட்டம் மற்றும் விதிமுறைகளின் படி அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூக நல உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்கான கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளை கொண்ட நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. இளைஞர் நீதி குழுமத்திற்கு ஒரு பெண் 2 சமூக நல உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப் படவுள்ளனர்.

குழந்தைகள் தொடர்பான உடல் நலம் , கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல் , மனநல மருத்துவம் , சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும் , 65 வயது பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குழுமத்தில் அதிகபட்சமாக ஒரு நபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர்கள் ஆவர். ஆனால் தொடர்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது.

இதற்கான விண்ணப்ப படிவத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் கேற்கண்ட பதவிக்கு அதற்காக அமைந்த படிவத்தில் கீழ்கண்ட முகவரியில் கிடைக்குமாறு விண்ணப்பிக்கலாம். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு , எண் .KTS317 மணி தெரு, மாமல்லன் நகர் , காஞ்சிபுரம் மாவட்டம் , 631502, தொலைபேசி எண்: 044 27234950

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.

வேலைக்கான விவரம் :

Also Read : மத்திய NALCO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | Job Vacancy At NALCO

நிறுவனம்Kancheepuram Juvenile Justice Board
வேலையின் பெயர்Members (One Girl)
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை02
வயது விவரம்35 – 65 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறைShortlisting from Offline Application , Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி12.11.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி27.11.2021
விண்ணப்ப முறைOffline

இணையதள முகவரி

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் தேடுதல் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் .

Also Follow @ Facebook , Instagram , Twitter , Youtube , Sharechat , Webiste , Telegram