எலான் மஸ்க் ட்விட்டரின் வருவாயை நான்கு மடங்காக உயர்த்த திட்டம்

theduthal elon musk twitter

theduthal elon musk twitter

Spread the love

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். இவர் எலக்ட்ரிக் கார் தயாரிக்கும் நிறுவனமான டெஸ்லா மற்றும் விண்கல வடிவமைப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவற்றின் சிஇஓ ஆவார்.

கடந்த மாத தொடக்கத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் சில பங்குளை வாங்கிய எலான் மஸ்க் அடுத்த சில வாரங்களிலேயே ட்விட்டர் நிறுவனத்தை முழுமையாக வாங்க முடிவெடுத்துள்ளதாக அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். அதைத் தொடர்ந்து மற்ற பங்குதாரர்களை சந்தித்து பேசி, நிறுவனத்தின் முழு தொகையை உடனடியாக தந்து வாங்கிக்கொள்கிறேன் எனக் கூறி டீலை முடித்தார்.

இன்னும் சில நாள்களில் ட்விட்டரின் முழு கட்டுப்பாடுகள் மஸ்க்கின் கைகளுக்கு செல்லும் எனக் கூறப்படும் நிலையில், அந்நிறுவனத்தின் சிஇஓவாக மஸ்கே செயல்படுவார் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போதைய சிஇஓவான இந்தியாவின் பிராக் அகர்வால் பதவி நீக்கம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : 25 பந்துகளில் 134 ரன்கள் – ஒரே ஓவரில் 34 ரன்கள்

இந்நிலையில், 2028ஆம் ஆண்டுக்குள் ட்விட்டர் நிறுவனத்தின் வருவாயை நான்கு மடங்காக உயர்த்த எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு திட்டங்களை எலான் மஸ்க் செயல்படுத்த திட்டமிட்டுள்ளாதக் கூறப்படுகிறது. 2021ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தின் வருவாய் 5 பில்லியன் டாலராக உள்ளது. இதை 2028ஆம் ஆண்டில் 26.4 பில்லியன் டாலராக உயர்த்த எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தின் தற்போதைய வருவாயில் 45 சதவீதம் விளம்பரத்தை நம்பியுள்ள நிலையில், அதை குறைத்து டேட்டா லைசென்சிங், டிப்பிங், ஷாப்பிங் ஆகியவற்றின் மூலமாக வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது.

மேலும், 2028ஆம் ஆண்டுக்குள் அதன் பயனாளர்களை 93 கோடிக்கு மேல் உயர்த்தி, 10 கோடிக்கும் அதிகமான சப்ஸ்கிரைப்ரகளை கொண்டுவர எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார். இதற்காக, நேரடியாக 3,600 ஊழியர்களை வேலைக்கு எடுக்க மஸ்க் திட்டமிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் தேடுதல் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்

Also Follow @ Facebook , Instagram , Twitter , Youtube , Sharechat , Webiste , Telegram