UPSC-யில் காலியிடங்கள் என்னென்ன பதவிகள்? விண்ணப்பிப்பது எப்படி?

யுபிஎஸ்சி-யில் காலியிடங்கள் என்னென்ன பதவிகள்? விண்ணப்பிப்பது எப்படி?

யுபிஎஸ்சி-யில் காலியிடங்கள் என்னென்ன பதவிகள்? விண்ணப்பிப்பது எப்படி?

Spread the love

UPSC recruitment 2022 : யுபிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான upsc.gov.in படி, இந்த 2022 ஆம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி வேலை வாய்ப்பின் கீழ் மொத்தம் 14 பதவிகள் காலியாக உள்ளன.

யுபிஎஸ்சி (UPSC) என்று அழைக்கப்படும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (Union Public Service Commission) ஆனது மூத்த நிர்வாக அதிகாரி, உதவி வேலைவாய்ப்பு அதிகாரி, துணை மண்டல வேலைவாய்ப்பு அதிகாரி மற்றும் உதவி பேராசிரியர் (ஆயுர்வேதா) உள்ளிட்ட பல்வேறு காலியிடங்களுக்கான வேலை வாய்ப்புகளை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

யுபிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான upsc.gov.in படி, இந்த 2022 ஆம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி வேலை வாய்ப்பின் கீழ் மொத்தம் 14 பதவிகள் காலியாக உள்ளன. பொருத்தமான தகுதி மற்றும் பணி அனுபவம் உள்ள ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் upsc.gov.in என்கிற யுபிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ தளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை வருகிற பிப்ரவரி 10, 2022 வரை நீளும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Also Read : South Indian வங்கியில் வேலைவாய்ப்பு

யுபிஎஸ்சி வேலை வாய்ப்பு 2022: பதவி வாரியான காலியிட விவரங்கள்

மூத்த நிர்வாக அதிகாரி (Senior Administrative Officer): 8 பதவிகள்

உதவி வேலைவாய்ப்பு அதிகாரி (Assistant Employment Officer): 1 பதவி

துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி (Sub-Regional Employment Officer): 1 பதவி

உதவி பேராசிரியர் – ஆயுர்வேதம் (Assistant Professor (Ayurveda)): 4 பணியிடங்கள்

யுபிஎஸ்சி வேலை வாய்ப்பு 2022: தகுதிக்கான அளவுகோல்கள்

கல்வித் தகுதி: மேற்கூறிய பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் / கல்லூரியில் தொடர்புடைய பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விரிவான கல்வித் தகுதிககளை பற்றி அறிய யுபிஎஸ்சி இணையதளத்தை பார்வையிடவும்.

வயது வரம்பு: மூத்த நிர்வாக அதிகாரிக்கு 35 வயதும், உதவி வேலைவாய்ப்பு அதிகாரிக்கு 35 வயதும், துணை மண்டல வேலைவாய்ப்பு அலுவலருக்கு 30 வயதும், உதவிப் பேராசிரியருக்கு (ஆயுர்வேதம்) 45 – 50 வயதும் இருக்க வேண்டும்.

யுபிஎஸ்சி வேலை வாய்ப்பு 2022 தேர்வு செய்யப்படும் செயல்முறை

கல்வித் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். பின்னர் நேர்காணலின் அடிப்படையில் இறுதித் தேர்வு நடைபெறும்.

யுபிஎஸ்சி வேலை வாய்ப்பு 2022 விண்ணப்பிப்பது எப்படி?

  • யுபிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும், அறியாதோர்கள் https://www.upsconline.nic.in/ என்கிற இணையதளத்திற்குள் செல்லவும்.
  • இப்போது ஆன்லைன் ரெக்ருமென்ட் அப்ளிகேஷன் (ஓஆர்ஏ) ஃபார் வேரியஸ் ரெக்ருமென்ட் போஸ்ட்ஸ் (Online Recruitment Application (ORA) for Various Recruitment Posts) என்கிற டேப்-ஐ கிளிக் செய்யவும்.

  • இப்போது நீங்கள் ஒரு புதிய பக்கத்திற்குத் திருப்பி விடப்படுவீர்கள், அங்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவிக்கு எதிராக இருக்கும் அப்ளை நௌவ் (Apply Now) இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது விண்ணப்பிப்பதற்கான முக்கியமான வழிமுறைகளைப் படிக்கவும், பிறகு தொடரவும்.

  • அடுத்த பக்கத்தில் நியூ ரிஜிஸ்ட்ரேஷன் (New Registration) என்பதைக் கிளிக் செய்யவும்.
  • தேவையான அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பின்னர், சேவ் அன்ட் கன்ட்டினியூ (Save and Continue) என்பதைக் கிளிக் செய்யவும்.

  • ரிஜிஸ்டர் செய்தவுடன், பதிவுசெய்யப்பட்ட யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்டை பயன்படுத்தி லாக்-இன் செய்யவும்.
  • இப்போது ஃபார்மின் மீதமுள்ள பகுதியைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை அப்லோட் செய்யவும். தேவைப்பட்டால் விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தவும்.

  • எல்லாம் முடிந்ததும், முறையாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் நகலை பதிவிறக்கம் செய்து, எதிர்கால பயன்பாட்டிற்காக சேமித்து வைத்து கொள்ளவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் தேடுதல் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்

Also Follow @ Facebook , Instagram , Twitter , Youtube , Sharechat , Webiste , Telegram