டயர் வெடித்து விபத்து 24 மாணவர்கள் படுகாயம் டிரைவர் கைது

Spread the love

தனியார் பள்ளி மாணவர்கள் சென்ற வேன் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 24 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ள நிலையில் டிரைவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தின் நகர்ப்புறத்தில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் படிப்பதற்காக ஆந்தக்குடி, மாப்படுகை, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் தினமும் அரசு பேருந்துகள் மற்றம் தனியார் வாகனம் மூலம் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் மயிலாடுதுறை நகரில் உள்ள 5-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு வந்த தனியார் வேன் ஒன்று வடக்கு சாலிய தெருவில் வரும் போது டயர் வெடித்து விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் வேனில் இருந்த 24 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அதனை அறிந்து சம்பவ இடத்துக்க வந்த போலீசார் வேனுக்குள் சிக்கி இருந்த மாணவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

பின்னர் அந்த மாணவர்களை ஆம்புலன்ஸ் உதவியுடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் வேன் டிரைவர் மனோகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் தேடுதல் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்

Also Follow @ Facebook , Instagram , Twitter , Youtube , Sharechat , Webiste , Telegram