சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

Spread the love

சென்னை, மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால், காலை அலுவலகம் செல்வோரும், வாகன ஓட்டிகளும் சற்று சிரமமடைந்துள்ளனர். அதேவேளை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை காணப்படுகிறது.